இலங்கையில் பேஸ்புக், டிவிட்டர் விரைவில் தடைசெய்யப்படும் அபாயம்!…..

சமூக வலைத்தளங்கள் உலக சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்று சிறிலங்காவின் பிரதமர் தெரிவித்திருந்த கருத்தானது, சமூக வலைத்தளங்கள் விரைவில் இலங்கையில்; தடைசெய்யப்படலாம் என்கின்றசெய்தியைவெளிப்படுத்திநிற்பதாக ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களும், ஏனைய இணையத்தளங்களும் இன்று உலக சமாதானத்தை குழப்பும் சாதனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.. எனவே அதனைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் ரனில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதுவும், பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பாதுகாப்புப் படைத் தளபதிகள் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையைமுன்மொழிந்திருக்கின்றார்.

இது சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் அரசாங்கத்தின் விருப்பத்தையும், திட்டத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது என்று பரவலாக குற்றசசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

யுத்தத்தின் போக்கு சம்பிரதாயபூர்வமான ஆயுத மோதலில் இருந்து சமூக வலைளத்தளங்களை நோக்கி மாறியிருப்பதாக தெரிவித்துள்ள சிறிலங்கா பிரதமர்இ பேஸ்புக்இ டுவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முகம்கொடுப்பதற்கு வலுவான சர்வதேச பாதுகாப்பு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சிறிலங்கா இராணுவத்தினர் போருக்குப் பின்னர் வருடாந்தம் நடத்திவரும் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்காஇ சீனாஇ ரஷ்யாஇ இந்தியாஇ பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பாதுகாப்புப் படைத் தளபதிகள் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையைமுன்மொழிந்திருக்கின்றார்.

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் சர்வதேச சிக்கல்களுக்கு மத்தியில் தேசத்தின் பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறிலங்கா இராணுவத்தின் 2108 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் உயர்நிலை இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர்இ சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

‘ சமூக வலைத்தளங்கள் உட்பட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்படும் சமூக ஊடகங்கள் குறிப்பாக சம்பிரதாயபூர்வமான ஊடகங்களை தவிர்ந்த ஏனைய ஊடகங்கள்இ உலக சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. பேஸ்புக்இ டுவிட்டல் போன்ற சமூக வலைத்தளங்களும்இ ஏனைய இணையத்தளங்களும் இன்று உலக சமாதானத்தை குழப்பும் சாதனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக டுனீசியாஇ எகிப்து போன்ற ஆகிய நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தி ஸ்திரமற்ற நிலமையை உருவாக்குவதற்கு இந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்திருந்ததை கண்கூடாக காண முடிந்தது’ என்று தெரிவித்தார்.

சிறிலங்கா பிரதமரினால் சுட்டிக்காட்டப்படட மேற்கு ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்ற இந்த குழப்பங்கள் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிக முக்கிய மக்கள் புரட்சியாகவே சர்வதேச அளவில் பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக இந்த புரட்சிகளின் போது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முழுமையான ஆதரவுடன் செயற்பட்டுவரும் சமூக வளைத்தளங்களே முக்கிய பங்கு வகித்திருந்தன.

எவ்வாறாயினும் சமூக வலைத்தளங்களால் உள்நாட்டிலும்இ சர்வதுச ரீதியிலும் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அச்சம் வெளியிட்ட சிறிலங்கா பிரதமர்இ இவற்றுக்கு முகம்கொடுப்பதற்கு சர்வதுச பாதுகாப்பு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களை ஒரு வாரகாலத்திற்கு மேல் முடக்கியிருந்ததுடன்இ இன்றும் சில இணையத்தள ஊடகங்களை முடக்கி வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

12Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*